உலகம்

சைக்கிளில் வந்து சொகுசு கார் மீது துப்பாக்கிசூடு... வாயில் பாய்ந்த குண்டு..திடீர் பரபரப்பு

தந்தி டிவி

இலங்கையில் சொகுசுக்கார் மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஓட்டுனரின் வாயில் குண்டு பாய்ந்தது. இலங்கையின் தென்பகுதியில் உள்ள களுத்துறை என்ற இடத்தில் சாலையில் நின்று கொண்டிருந்த சொகுசு கார் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் கார் ஓட்டுனரின் வாயில் துப்பாக்கி குண்டு பாய்ந்தநிலையில், படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவர் வட்டிக்கு கடன் வழங்குபவர் எனவும், அவர் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்