அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, Freedom மற்றும் Feathers எனப் பெயரிடப்பட்ட இரண்டு வான்கோழிகளுக்கு அதிபர் டிரம்ப் மன்னிப்பு வழங்கினார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த ஆண்டு விழாவில், வான்கோழிகள் உணவாகப் பயன்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அப்போது ஒரு வான்கோழி புதருக்குள் ஓடியதால் நிகழ்ச்சியில் சிரிப்பலை ஏற்பட்டது.