உலகம்

தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த அனைவரும் பத்திரமாக மீட்பு

நேற்று வரை 8 பேர் மீட்கப்பட்டிருந்த நிலையில் இன்று 5 பேர் மீட்கப்பட்டனர்

தந்தி டிவி

குகையில் சிக்கிய அனைவரும் பத்திரமாக மீட்பு

தாய்லாந்து குகைக்குள் சிக்கி, கடந்த 16 நாட்களுக்கும் மேலாக உயிர் பிழைப்போமா என தவித்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். கடந்த 2 நாட்களாக தலா 4 பேர் வீதம் மொத்தம் 8 பேர் மீட்கப்பட்டு இருந்தனர். உயிரை பணயம் வைத்து, மீட்பு குழுவினர் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றது. இதன்படி, குகைக்குள் சிக்கி, உயிருக்கு போராடிய 12 சிறுவர்களும், பயிற்சியாளர் உள்பட அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர். கடைசியாக பயிற்சியாளரும் குகையை விட்டு வெளியே வந்தபோது, கூடியிருந்த உறவினர்களும் குடும்பத்தினரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதுபோல சிக்கலான குகைக்குள் சிக்கிய, அனைவரையும் மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பது, வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை