இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவு கடல் பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் தமிழக மீனவர்கள் ஈடுபடுவது சட்டத்திற்கு விரோதமானது என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுர சூரிய பண்டார தெரிவித்துள்ளார். மேலும் தமிழக மீனவர்கள் திட்டமிட்டு குற்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், சர்வதேச விதிகளை மீறி செயல்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்த தயார் எனவும் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்துக்கு தமிழக மீனவர் சங்கத்தின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்கள் குறித்து இலங்கை கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்திருக்கும் கருத்து உண்மைக்கு மாறானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.