தைவானின் மிக உயரமான தைபே கோபுரத்தில் இருந்து கண்கவர் வண்ணங்களோடு, நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கை, அனைவரையும் கவர்ந்தது. 101 அடுக்குமாடியை கொண்ட இந்த கட்டிடத்தின் தரை தளம் தொடங்கி, வானளாவிய மேல்தளம் வரை, ஒரே நேரத்தில் வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. அப்போது புத்தாண்டை வரவேற்று, ஆயிரக்கணக்கான மக்கள் முழக்கமிட்டனர்.