சீனாவின் உள்நாட்டு விவகாரம் தைவான் என்பதால், அதில் வெளிநாடுகள் தலையிட வேண்டிய அவசியமில்லை என்று சீனா தெரிவித்துள்ளது. தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா தெரிவித்து வரும் நிலையில், தங்கள் மீது எப்போது வேண்டுமானாலும் சீனா படையெடுக்கலாம் என்று தைவான் அச்சத்தில் உள்ளது. தைவானை சீனா தாக்க முற்பட்டால் அமெரிக்கா பாதுகாப்பு அளிக்கும் என்று அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக தைவான் சீனாவின் பிரிக்கமுடியாத பகுதி என்றும், இது உள்நாட்டு விவகாரம் என்பதால் வெளிநாடுகள் தலையிட அவசியமில்லை என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். சீனாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் வரும்போது சீனா சமரசம் செய்யவோ விட்டுக்கொடுக்கவோ முடியாது என்று அவர் கூறினார்.