யாழ் பல்கலைக்கழகத்தில் கடந்தவாரம் ராணுவத்தினரும் அதிரடிப்படையினரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாவீரர் தின சுவரொட்டிகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து மாணவர்கள் சார்பில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, ஜாமீன் வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என கூறி, மாணவர்களை 16 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.