ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சட்டம் கடுமையாக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சிட்னி கடற்கரையில் யூத பண்டிகையின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், பெண்கள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பொதுமக்கள், ஆஸ்திரேலியாவுக்கு துப்பாக்கி கலாசாரம் தேவையில்லை என ஒருமித்த குரலில் வலியுறுத்தினர்.