உலகம்

hormuz strait | இந்திய கப்பல்கள் மீது கடும் தாக்குதல் - ஹார்முஸ் ஜலசந்தியில் தொற்றிய பெரும் பதற்றம்

thanthitv

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கி சூடு - இந்தியா கண்டனம் ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.. இந்தியாவின் 'சன்மார் ஹெரால்டு' மற்றும் 'ஜாக் அர்னவ்' ஆகிய 2 வணிகக் கப்பல்கள் மீது, ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை துப்பாக்கி சூடு நடத்தியது. எனினும் அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை... இதனிடையே இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், டெல்லியில் உள்ள ஈரான் தூதர் முகமது ஃபதாலியை நேரில் அழைத்து விளக்கம் கேட்டுள்ளது.. இந்திய வணிகக் கப்பல்கள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என ஈரான் தூதரிடம் இந்திய வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.. இந்தியாவின் கருத்துக்களைத் தனது நாட்டின் மேலதிகாரிகளுக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக ஈரான் தூதர் உறுதி அளித்துள்ளார்

Powercut| மின்வெட்டை சமாளிக்க அரசு எடுத்த முக்கிய முடிவு

TNPSC | Group 4 Exam | ஆயிரக்கணக்கில் அரசு வேலை.. வெளியானது குரூப் 4 அறிவிப்பு

BREAKING || ராகுல், பிரியங்கா காந்தி கைது - டெல்லியில் பெரும் பரபரப்பு

Veeramani | Case | GEM வீரமணி வழக்கில் காங்கிரஸ் நிர்வாகியிடம் விசாரணை

Puducherry | புதுச்சேரி இடைத்தேர்தல் இறுதி கட்டத்தில் அதிகரித்த வாக்குப்பதிவு