இலங்கை அதிபர் கோத்தயப ராஜபக்சே இந்தியா வரும் போது, இலங்கையில் உள்ள தமிழர்கள் நலன் பற்றி விவாதிக்கப்படுவது நன்மைக்குரியது என இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் ஆப்ரஹாம் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு , சம உரிமை வழங்குதல் தொடர்பாக இலங்கை அதிபருடன் விவாதிக்கப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார், இந்நிலையில் இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ஆப்ரஹாம் சுமந்திரன், இதற்கு தமிழர்கள் எவ்வித கருத்து வேறுபாடு இன்றி, மத்திய அரசுடன் இணைந்து இலங்கை தமிழர்களின் நன்மைக்காக செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.