உலகம்

2 போலீஸ் அதிகாரிகள் கொலையில் இலங்கை முன்னாள் அமைச்சர் கருணாவுக்கு தொடர்பு : நாடாளுமன்றத்தில் எம்.பி கருத்தால் பரபரப்பு

இலங்கையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொலையில், முன்னாள் அமைச்சரும் ராஜபக்சே ஆதரவாளருமான கருணாவுக்கு தொடர்பு உள்ளதாக, அந்நாட்டு எம்பி நளின் பண்டார குற்றஞ்சாட்டி உள்ளார்.

தந்தி டிவி
இலங்கையில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் கொலையில், முன்னாள் அமைச்சரும் ராஜபக்சே ஆதரவாளருமான கருணாவுக்கு தொடர்பு உள்ளதாக, அந்நாட்டு எம்பி நளின் பண்டார குற்றஞ்சாட்டி உள்ளார். அமைச்சர்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தின் மீது, நாடாளுமன்றத்தில் பேசிய அவர், அண்மையில், கருணா அம்மான் தனது சமூக வலைதள பக்கத்தில், '2004ம் ஆண்டுக்கு முந்தைய கருணா யார் என கேட்டுப் பாருங்கள்' என அச்சுறுத்தல் விடுக்கும் வகைளில் பதிவிட்டிருந்ததை சுட்டிக் காட்டினார். அந்த மிரட்டலை தொடர்ந்து, போலீஸ் அதிகாரிகள் கொலை நடந்துள்ளதாகவும், இது குறித்து அதிபர் சிறிசேனா விசாரிக்க வேண்டும் எனவும் நளின் பண்டார, நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ