உலகம்

இலங்கையில் நீரில் மூழ்கி 6 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

தந்தி டிவி

அம்பாறை மாவட்டம் காரைதீவு மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகில் வாகனம் ஒன்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்... நிந்தவூரில் இருந்து சம்மாந்துரை நோக்கி பயணித்த வாகனம் மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு விபத்திற்குள்ளானதில் நீரில் மூழ்கி 6 மாணவர்களும், ஓட்டுநர் மற்றும் உதவியாளர் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். நாடு முழுவதும் கனமழை வெள்ளத்தால் 23 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 99 ஆயிரத்து 876 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 35 ஆயிரத்து 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 17 பேர் காயமடைந்துள்ளதுடன் 2 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது... பாதிக்கப்பட்ட 89 ஆயிரத்து 7 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்