தமிழகத்தில் பதுங்கியிருந்த இலங்கையின் தாதாவான அங்கொட லொக்கா உயிரிழந்த நிலையில் அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே அவரின் நெருங்கிய உறவினர் ஒருவரின் மரபணுவை இந்திய அரசு கேட்டிருப்பதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த மரபணுவை விரைவாக இந்தியாவிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.