உலகம்

அடுத்த இலக்கு முஸ்லிம் பள்ளிவாசல்கள் - சிஐடியின் சிறப்பு தலைவர் எச்சரிக்கை

இலங்கையில் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த மற்றொரு தீவிரவாத குழு திட்டமிட்டுள்ளதாக சிஐடியின் சிறப்பு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

இலங்கையில் பள்ளிவாசல்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த மற்றொரு தீவிரவாத குழு திட்டமிட்டுள்ளதாக சிஐடியின் சிறப்பு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஹுப்பு மற்றும் அவிலியா பள்ளிவாசல்கள் தீவிரவாதிகளின் இலக்கு என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை என்பதால், சிறப்பு கூட்டு வழிபாட்டிற்காக பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடும் வேளையில், கூடுதல் கவனம் செலுத்தி கண்காணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, அனைத்து போலீஸ் உயர் அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிவாசல்களில் பாதுகாப்பு அதிகரித்ததோடு, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போலீஸ் தலைமை அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்