உலகம்

நாளை இலங்கை நாடாளுமன்ற தே​ர்தல் - இலங்கையில் திருப்ப​த்தை ஏற்படுத்துமா ஆகஸ்ட் 5?

உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தால் மக்கள் முட​ங்கி உள்ள நிலையில் இலங்கையில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

தந்தி டிவி

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 5 மாதங்களுக்கு பின்னர் பொதுத் தேர்தல் நடைபெறுவது இலங்கை வரலாற்றில் முதல் முறை என்பதால், இந்த தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. வழக்கமாக இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு 10 முதல் 14 நாட்களுக்குள் வேட்பு மனுக்கள் கோரப்படுவது வழக்கம். இதனைத் தொடர்ந்து 5 முதல் 7 வாரங்களுக்குள் பொதுத்தேர்தல் நடைபெற வேண்டும் என்பது வழக்கமான நடைமுறையாகும். இந்நிலையில் அதிபர் கோட்டபய ராஜபக்சவால் கடந்த மார்ச் ஒன்றம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால், 5 மாதங்களுக்கு பின்னர் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் மூலம் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்தலில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த மூவாயிரத்து 682 பேரும், சுயேட்சைகள் மூவாயிரத்து 800 பேர் என மொத்தம் ஏழாயிரத்து 452 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 874 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஆகஸ்ட் 6ம் தேதி காலை 8 மணி முதலே வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என்றும், நள்ளிரவுக்குள் முடிவு தெரிய வரும் என கூறப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக பிரசார கூட்டங்கள், சுகாதார அமைச்சகத்தின் நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கைக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்குச் சாவடியில் உள்ளே நுழையும் போதும், வெளியேறும் போதும் கை சுத்தம் செய்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.விரலுக்கு மை பூசும்போதும் சுகாதார விதிமுறை பின்பற்றப்பட உள்ளது என்றும்,ஒருமீட்டர் இடைவெளி கடைபிடிப்பது, முககவசம் அணிந்து வர வேண்டும் எனவும் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தும் முகாம்களில் வாக்களிப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு மட்டும் வாக்களிக்க வசதி செய்து தரப்பட்டு உள்ளது. புதன்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை வந்து வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இலங்கை தேர்தல் கொரோனா பாதிப்பின் பிடியில் இருந்து, இயல்பு நிலைக்கு உலக நாடுகள் திரும்ப நல்ல வழிகாட்டுதலை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி