உலகம்

ராஜபக்ச கட்சி மட்டும் 144 இடங்களை கைப்பற்றி வெற்றி - இலங்கை பிரதமராக 9ந் தேதி பதவியேற்கிறார் ராஜபக்ச

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில், அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச, வரும் 9ந் தேதி பிரதமராக பதவியேற்க உள்ளார்.

தந்தி டிவி

நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ராஜபக்சவின் பொதுசன பெரமுன கட்சி 144 இடங்களை பிடித்துள்ளது. கூட்டணியுடன் சேர்த்து 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றியுள்ளன. 1977ஆம் ஆண்டுக்கு பிறகு, நடந்த தேர்தல் வரலாற்றில், தனியொரு கட்சி அதிக இடங்களை பிடிப்பது இதுவே முதல்முறை. மூன்றில் இரண்டு எம்.பி.க்களுடன் அந்தக் கட்சி ஆட்சியமைக்க உள்ளது. இதனிடையே, வடகிழக்கு மாகாணத்தில்,16 ஆக இருந்த தமிழ் பிரதிநிதித்துவ எம்.பி.க்களின் எண்ணிக்கை 10 ஆக சரிந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு தேர்தலில் 144 இடங்களையும், 2015-ல் 95 இடங்களையும் பிடித்த ராஜபக்‌ச கட்சி தற்போது, 150 இடங்களை பிடித்து தனிப் பெரும்பான்மையுடன் வென்றுள்ளது. மஹிந்த ராஜபக்ச 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று தனிச் சாதனை படைத்துள்ளார். இந்தநிலையில் வரும் ஞாயிற்றுகிழமை, இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்க உள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இருப்பினும் அமைச்சரவை பதவியேற்பது குறித்து இன்னும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி