இலங்கையில் இனகலவரம் நடைபெற்ற குருநாகல், கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கிம் பார்வையிட்டார். கொட்டராமுல்ல, தும்மோதர, புஜ்ஜம்பொல உள்ளிட்ட பிரதேசங்களில் அவர் ஆய்வு செய்தபோது, பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். அவர்களிடம், சேதத்துக்கான இழப்பீடு வழங்குவதற்காக சிறப்பு மதிப்பீட்டு குழு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சர் ரவூப் ஹக்கிம் உறுதி அளித்தார்.