இலங்கை கிளிநொச்சியில் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பொதுமக்கள் அடித்து கொன்றனர்.இதைத் தொடர்ந்து
10 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில் சிறுத்தையை உடற்கூறு ஆய்வு செய்தபோது உடலில் அதிகளவு கொழுப்புதன்மை இருந்ததாகவும்,இது கூண்டில் வைத்து வளர்க்கப்பட்ட சிறுத்தை எனவும் மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து சிறுத்தை இராணுவ முகாமில் வளர்க்கப்பட்டிருக்கும் என பொதுமக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.