இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நீதிமன்றத்தில் தண்டனை விதக்கப்படலாம் என அந்நாட்டின் எம்பி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊழல் மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் என்ற அடிப்படையில் அதிபரும் சிறையில் இருக்க வேண்டியவர் தான் என நீதிமன்றம் தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது ஆட்சிக் காலத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டிக்கப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.