தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும், சிறிசேன அரசுடன் இணைய முடியாது என கூறிவிட்டதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைதளபக்கத்தில், ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவை அவரது அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து அவரது அரசாங்கத்தில் இணைய முடியாது என கூறிவிட்டதாக பதிவிட்டுள்ளார்.