உலகம்

2020-ஆம் ஆண்டிலும் சுதந்திர கட்சியே ஆட்சியமைக்கும் : இலங்கை அதிபர் சிறிசேன நம்பிக்கை

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி 2020-ம் ஆண்டில் இலங்கையில் புதிய அரசாங்கத்தை அமைக்க போவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தி 2020-ம் ஆண்டில் இலங்கையில் புதிய அரசாங்கத்தை அமைக்க போவதாக அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 68-வது ஆண்டு நிறைவு விழா கொழும்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், அனைவரும் அதிபர் தேர்தல் குறித்தே பேசுவதாகவும், ஆனால் 2020-ஆம் ஆண்டில் நாட்டை பிரதமர் தான் பொறுப்பார் எனவும் கூறினார். எனவே பிரதமரை நியமிப்பதில் சுதந்திரா கட்சி தனிக்கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். 2020ஆம் ஆண்டிலும் சுதந்திரக் கட்சியே ஆட்சியமைக்கும் என சிறிசேனா குறிப்பிட்டுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்