இலங்கை நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்க, அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைய உள்ள நிலையில் முன்கூட்டியே கலைத்து, தேர்தல் நடத்த கோட்டாபய ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், அடுத்த தேர்தல் வரை, மகிந்த ராஜபக்சேவே பொறுப்பு பிரதமராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.