உலகம்

இலங்கையில் 20-ஆவது சட்ட திருத்தம் நிறைவேற்றம் - 156 எம்பிக்கள் ஆதரவு, 65 எம்பிக்கள் எதிர்ப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் 20-ஆவது சட்டத் திருத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது.

தந்தி டிவி


"ஆபத்தான இருண்ட நாளாக பதிவு செய்து கொள்ளுங்கள்"

இலங்கை நாடாளுமன்றத்தில் 20-வது திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளை ஒரு ஆபத்தான இருண்ட நாளாக பதிவு செய்து கொள்ளுங்கள் என்று எம்.பி. சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். 72 வருடங்களுக்கு மேலாக நீடிக்கும் இனப்பிரச்சினை தொடர்பாக அதிபர் கோத்தபய ராஜபக்சவால் இதுவரை ஒரு வார்த்தையும் பேசமுடியவிலை என்றும் சிவஞானம் சிறிதரன் குற்றம்சாட்டினார்.

இரட்டை குடியுரிமை பிரிவுக்கு கண்டனம் - அமெரிக்க தேசிய கொடியை உயர்த்தி எதிர்ப்பு

20-வது திருத்த சட்டத்தில் உள்ள இரட்டை குடியுரிமை பிரிவுக்கு கண்டம் தெரிவித்து இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் அமெரிக்க தேசிய கொடியை உயர்த்தி காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதை கண்டித்து ஆளுங்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.

சிறையில் உள்ள எம்.பி. ரிஷாத் பதியுதீன் - நாடாளுமன்றத்துக்குள் வர கட்சி தலைவர்கள் எதிர்ப்பு

இலங்கையில் அரசு சொத்துக்களை தவறாக பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட எம்.பி. ரிஷாத் பதியுதீன் பாதுகாப்பு உடையுடன் நாடாளுமன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட அவரை நாடாளுமன்றத்தில் அனுமதிக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்