யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு விசா வழங்க இயலாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. சிங்கள நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் மூலம், இந்த தகவல் உறுதியாகி உள்ளது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன், சமீபத்தில் சென்னை வந்திருந்த போது, நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்தார். அப்போது, இலங்கைக்கு வருமாறு, ரஜினிகாந்துக்கு அவர் அழைப்பு விடுத்தார். இதனை ரஜினிகாந்த் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அரசியல் நடவடிக்கைக்காகவே அவர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவதாகவும், அத்தகைய நடவடிக்கைக்கு விசா வழங்கப்படமாட்டாது என, இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.