உலகம்

ராஜபக்சேவுக்கு ஆதரவு தருமாறு நெருக்கடி - முல்லைத் தீவு எம்.பி. சாந்தி குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்பிக்களுக்கு கோடி, கோடியாக பணம் மற்றும் அமைச்சர் பதவிகளை தருவதாக கூறி நெருக்கடி அளிக்கப்படுவதாக முல்லைத் தீவு எம்.பி. சாந்தி குற்றச்சாட்டு.

தந்தி டிவி

ராஜபக்சேவுக்கு ஆதரவு அளித்தால், பல்வேறு சலுகைகளை அள்ளித் தருவதாக கூறி, எம்பி.க்களை விலை பேசுவதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் குற்றஞ்சாட்டி உள்ளார். முல்லைத் தீவு அருகே ஓதியமலை கிராமத்தில், இலங்கை ராணுவத்தால் 32 பேர் கொல்லப்பட்டதன் 32ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதில், முல்லைத்தீவு எம்பி சாந்தி சிறிஸ்கந்தராசா பங்கேற்று நினைவு ஸ்தூபிகளை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சிக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சாந்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எம்பிக்களுக்கு கோடி, கோடியாக பணம் மற்றும் அமைச்சர் பதவிகளை தருவதாக கூறி நெருக்கடி அளிக்கப்படுவதாக கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்