உலகம்

இலங்கையில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து : விபத்தில் 9 பேர் பலி

இலங்கையில் 100 அடி பள்ளத்துக்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி
இலங்கையில் ஊவா மாகாணம், பதுளை மாவட்டம், பசறை அருகே அரசு பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. பசறையில் இருந்து எக்கிராவ என்ற இடத்துக்கு சென்றபோது, மடுல்சீமை என்ற இடத்தில் இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 20 பேரின் நிலைமை மோசமாக உள்ளதால் பதுளை மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்கலாம் என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், விபத்து குறித்து பசறை போலீசார் விசாரித்து வருகின்றனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி, சாலையில் இருந்து விலகிச் சென்றதால் விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி