#spaintraincollision #spaintraintragedy
ஸ்பெயினில் இரு அதிவேக பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், பலியானோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது.. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டிலிருந்து ஆண்டலூசியா (Andalusia) நோக்கி இரு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் முன்னும், பின்னுமாக சென்று கொண்டிருந்தன. முன்னால் சென்று கொண்டிருந்த ரயில், சிக்னல் கோளாறு காரணமாகத் டோலிடோ (Toledo) அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு ரயில், நின்று கொண்டிருந்த ரயிலின் பின்புறத்தில் பலமாக மோதியது.... இந்த கோர விபத்தில் பல பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்தன. விபத்து நடந்த இடத்தில் ஹெலிகாப்டர்கள் மற்றும் அவசரக்கால மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.