உலகம்

வங்கி சேவையில் அதிநவீன தொழில்நுட்பம் - பல்வேறு சேவைகளை கையாளும் ஒரே நவீனம்

வங்கி சேவையில் புதிய அதிநவீன தொழில் நுட்பம் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து, அலசுகிறது, இந்த செய்தித்தொகுப்பு

தந்தி டிவி

தகவல் தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் அதிவேகமாக ஊடுருவி வரும் நிலையில் வங்கி சேவையில் நாளுக்கு நாள் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பாரம்பரிய நேரடி கணக்கிட்டு முறையில் இருந்து சற்றே உயர்ந்து இணைய வழி, தொலைபேசி வழி, வங்கி சேவைகள் பெருகியுள்ள நிலையில் முகத்தை அடையாளம் காண்பதன் மூலம் வங்கி சேவையை தொடர வாடிக்கையாளரை அனுமதிக்கும் முறை தற்போது அறிமுகமாகி புதிய புரட்சிக்கு வித்திட்டுள்ளது. விமான நிலையங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த அந்த மென்பொருள் தற்போது வங்கிகளுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. தாய்லாந்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருள் ஒருவர் வங்கி கணக்கை தொடங்கவோ, அதனை தொடரவோ வங்கிக்கு வரவேண்டிய தேவையில்லை என்ற சூழலை தந்துள்ளது. கைரேகை பதிவை போல் ஒரு முறை முகத்தை ஸ்கீரின் செய்துவிட்டால் போதும் என்பதே இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படை. வாடிக்கையாளர் பற்றிய அனைத்து பாதுகாக்கப்பட்ட அடையாளங்களுக்கும் பதில் இது ஒன்றே போதும் என்பதே இதன் சிறப்பு. வங்கியின் வேலை நேரத்தில் மட்டுமே இந்த சேவையை பயன்படுத்த முடியும். பல்வேறு சேவைகளுக்கு பணம் கட்டுதல், தகவல் பெறுதல், மிட்சுவல் ஃபண்ட் செயல்படுத்துதல், கடன் அட்டை பயன்பாடு உள்ளிட்ட எல்லாவற்றையும் இதன் மூலம் கையாள முடியும் என்பதே இதன் பெரும் சிறப்பாகும்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி