உலகம்

விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம் - 2 பேர் பலி-2 பேர் காயம்

விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம் - 2 பேர் பலி-2 பேர் காயம்

தந்தி டிவி

விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம் - 2 பேர் பலி-2 பேர் காயம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில், சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 என்ஜின்களை உடைய சிறிய ரக சி-340 விமானம் அரிசோனா நோக்கி புறப்பட்ட நிலையில், சான் டியாகோ பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் அருகே அவசர காரணங்களுக்காக தரையிறக்க முயன்ற போது விபத்துக்குள்ளானது. இதில் இருவர் பலியாகினர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். பல வாகனங்களும் 2 வீடுகளும் சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கப் போராடினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்