உலகம்

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த `சிலி' Ex-அதிபர்.. தற்போதைய அதிபர் வெளியிட்ட அறிவிப்பு

தந்தி டிவி

சிலி நாட்டின் முன்னாள் அதிபர் செபஸ்டியன் பினெரா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். 74 வயதான செபஸ்டியன் பினெரா, இரண்டு முறை சிலி நாட்டின் அதிபராக இருந்துள்ளார். இவர், தெற்கு சிலியில் உள்ள லாகோ ராங்கோ நகர் பகுதியில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி ஏரியில் விழுந்த‌து. மீட்புப் படையினர் விரைந்து செல்வதற்குள், செபஸ்டியன் பினெரா உயிரிழந்துள்ளார். அதே நேரத்தில், அவருடன் பயணித்த 3 பேர் உயிர் பிழைத்துள்ளனர். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபர் கேப்ரியல் போரிக், மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என கூறியுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்