உலகம்

அமெரிக்கா வங்கியில் நடந்த துப்பாக்கி சூடு : ஆந்திர இளைஞர் உட்பட மூன்று பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில் உள்ள வங்கியில் நடந்த துப்பாக்கி சூட்டின் காட்சிகள் வெளியாகியுள்ளன.

தந்தி டிவி

சின்சினாட்டி நகரின் ஃபவுன்டைன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள வங்கி ஒன்றில் நுழைந்த 29 வயது இளைஞர் ஒமர் என்ரிக் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் 4 நிமிடம் போராட்டத்திற்கு பிறகு ஒமர் என்ரிக்கை சுட்டு வீழ்த்தினர்.

அந்த கொலையாளியால் கொல்லப்பட்ட மூவரில் ஒருவர் ஆந்திராவை சேர்ந்த பிருத்வி கன்டேபி என்ற இளைஞர் என்பது தெரியவந்துள்ளது. வங்கியில் பணியாற்றி வந்த பிருத்வியின் உடலை இந்தியா அனுப்ப அங்குள்ள தெலுங்கு அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு