சந்தேகப்படும் வகையில் நின்ற இருசக்கர வாகனம் - வெடிக்க வைத்து நிபுணர்கள் சோதனை
இலங்கை மொறட்டுவை பேருந்து நிலையத்தின் முன்பு சந்தேகத்திற்கிடமாக நின்ற இருசக்கர வாகனத்தை வெடிகுண்டு நிபுணர்கள் வெடிக்க வைத்து அதில் வெடி பொருட்கள் இல்லாததை உறுதி செய்தனர். நீண்ட நேரமாக அந்த வாகனம் நின்று கொண்டிருந்ததால், அதில் வெடிகுண்டு இருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தொடர் குண்டு வெடிப்பு காரணமாக இலங்கை தலைநகர் கொழும்புவின் முக்கிய பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது