“சனகட்ஸு“ ட்ரெண்ட் - புயலாய் வீசும் ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி
ஜப்பான்ல சனகட்ஸு அப்டின்ற ஒரு ட்ரெண்ட் இளைஞர்கள் மத்தில வைரலாகிட்டு இருக்கு...
சனகட்சு-னா ஜப்பானுடைய 64 வயது பிரதமர் சனே தகைச்சிக்கு Sanae Takaichi ஆதரவா உருவாகிருக்க ட்ரெண்ட்... அவுங்க ஸ்டைல காப்பி பண்றது...அவுங்கள பத்தின வீடியோச ஷேர் பண்றது...மீம்ஸ், ஹேஷ்டேக்-அ -பரப்புரதுலாம் இந்த ட்ரெண்டுல அடங்கும்...
இளைஞர்கள் மத்தில உருவாகிருக்க இந்த சனகட்ஸு ட்ரெண்ட் மூலமா சனே தகைச்சி Sanae Takaichi பொதுத் தேர்தல் கணிப்புகள்ல முன்னிலைல இருக்காங்க...
சனே பயன்படுத்தக்கூடிய ஹேண்ட் பேக், பேனா, ஸ்னாக்ஸ் வரைக்கும் சமூக வலைதளங்கள்ல ட்ரெண்டாகி விற்பனைக்கு பற்றாகுறையே ஏற்பட்டுருச்சு!
பிப்ரவரி 8 நடைபெறக்கூடிய பொதுத் தேர்தல்ல, சனே தலைமையிலான ஆளும் சுதந்திர ஜனநாயக கூட்டணி, 465 உறுப்பினர்களைக் கொண்ட கீழவைல 300 இடங்கள் வரைக்கும் கைப்பற்றும்-னு கருத்துக்கணிப்புகள் சொல்லுது...
இளைஞர்கள் மத்தில சனேவுக்கு 90%க்கு மேல ஆதரவு இருக்குறது குறிப்பிடத்தக்கது...