உலகம்

மனைவியின் சாபத்தால் பறிபோன கணவன் உயிர்..? - 4 வருஷமாக பெட் ரூமில் இருந்த உடல்

தந்தி டிவி

ஸ்வெட்லானா என்ற 50 வயது மதிக்கத்தக்க பெண் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது கணவரின் உடலை படுக்கையறையில் வைத்துக் கொண்டு அனுபிஸ் என்ற எகிப்திய கடவுளால் ஈர்க்கப்பட்டு பல அமானுஷ்ய சடங்குகளை செய்து வந்துள்ளார்... 49 வயதான விளாடிமிர் 4 வருடங்களுக்கு முன்பு தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்துள்ளார்... 2020 டிசம்பரில் ஸ்வெட்லானாவுக்கும் விளாடிமிருக்கும் இடையே சண்டை வந்ததாகவும், தனது கணவரைத் திட்டிய ஸ்வெட்லானா அவர் இறந்து விட வேண்டும் என கூறிய உடனேயே விளாடிமிர் கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது... இறந்த கணவரின் உடலை போர்வையில் போர்த்தி தனது அறைக்கு எடுத்துச் சென்று வைத்துக் கொண்ட ஸ்வெட்லானா இதுகுறித்து வெளியே கூறினால், ஆதரவற்றோர் இல்லத்திற்கு அனுப்பி விடுவதாக குழந்தைகளை மிரட்டியுள்ளார்... சமீபத்தில் சமூக சேவகர் ஒருவர் ஸ்வெட்லானா வீட்டிற்கு சென்று விசாரித்த போது உண்மை புலப்பட்டுள்ளது... மம்மி செய்யப்பட்ட விளாடிமிரின் காலடியில் எகிப்திய சிலுவை, டாரட் கார்டுகள், தாயத்துகள் மற்றும் விலங்குகளின் மண்டை ஓடுகளின் படங்கள் உட்பட பல அமானுஷ்ய பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர். விளாடிமிர் இதைத்தான் விரும்பியிருப்பார் என்று கூறி, தன் கணவரின் உடலைப் பாதுகாக்க ஸ்வெட்லானா பல சடங்குகளைச் செய்ததாகக் கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினரிடம் தனது கணவர் திபெத்தில் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார்... ஸ்வெட்லானாவுக்கு மன நல பாதிப்பு இருப்பதாக கருதப்படும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டதுடன், அவரது 4 குழந்தைகளும் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

Senthilbalaji Pressmeet | ``2 நாள் ஏன் வரவில்லை’’ - செந்தில்பாலாஜி பரபரப்பு விளக்கம்

Breaking | Rahul Gandhi | முடிவடைந்தது ராகுல் காந்தியின் மீட்டிங் | உள்ளே யார் யார்? | நடந்தது என்ன?

Tiruvannamalai Crime | ஓடும் பேருந்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு - 5 பேரை தூக்கிய போலீஸ்..

Wife | Theft | Chennai | கொள்ளை பணம்.. மனைவி மனம் குளிர சீமந்தம்

DMK | TVK | CM Vijay | ``முதல்வர் விஜய் அவர்களே..’’ - அரசியல் பரபரப்புக்கு நடுவே ஸ்டாலின் அறிக்கை