இந்த ஆண்டை சகிப்புத்தன்மை ஆண்டாக அமீரகம் கடைப்பிடிக்கிறது. இதையொட்டி பட்டத்து இளவரசர் அழைப்பின் பேரில் தனி விமானம் மூலம் வாடிகன் நகரில் இருந்து அபுதாபி நகருக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் வருகை தந்தார். தொடர்ந்து அதிபர் மாளிகையில் துணை அதிபர் அபுதாபி பட்டத்து இளவரசர் ஆகியோரை போப் சந்தித்து பேசினார். தொடர்ந்து அமீரக அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைமை இமாம் ஆகியோர் போப் ஆண்டவரை சந்தித்தனர்.முன்னதாக அரண்மனை ராணுவ மைதானத்தில் 21 குண்டுகள் முழங்க அவருக்கு, அரசு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து விமான படையினரின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.