ரஷ்யாவின் சைபீரியாவில் கொரோனாவால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஸ்க் நகரில் புதிதாக 401 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழிவதாக மருத்துவர்கள் கவலை கொண்டுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவுகள் முழுமையாக நிரம்பி விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்ரன. அவர்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.