உலகம்

பேரிடியாக வரும் முடிவை அறியாமல் ரிஷி சுனக் தனக்கு தானே சூனியம்...உலகமே எதிர்பார்த்த ஒரு ரிசல்ட்

தந்தி டிவி

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. கெய்ர் ஸ்டார்மருக்கு எனது வாழ்த்து. பிரிட்டன் மக்கள் இரவு ஒரு நிதானமான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். இதில் கற்றுக்கொள்ளவும் சிந்திக்கவும் நிறைய இருக்கிறது. இன்று நல்ல மற்றும் கடின உழைப்பாளர்கள் தோல்விக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன்...

பிரிட்டனில் ஆட்சியிலிருந்த கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியை தழுவியதற்கு பொறுப்பு ஏற்று... பிரதமர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்...

பிரிட்டன் நாடாளுமன்றத் தேர்தலில் ஆட்சியிலிருந்த கன்சர்வேட்டிவ் கட்சி அரசுக்கு, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்சிட் நகர்வே பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. நாட்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து காணப்பட்டது. 2022 அக்டோபரில் 40 ஆண்டுகளில் இல்லாத விலைவாசி உயர்வை நாடு கண்டது. இப்போது அது குறைந்தாலும் அடித்தட்டு, நடுத்தர மக்கள் மத்தியில் எதிர்ப்பையே சந்தித்திருந்தது. பிரிட்டன் பொது சுகாதாரத்துறையில் சிகிச்சை பெற முடியாது மக்கள் நெருக்கடியை சந்தித்தது. நாட்டில் அதிகரித்த அகதிகள் விவகாரம்..

இதையெல்லாம் சமாளிக்க ரிஷி சுனக் எடுத்த நடவடிக்கை எடுத்தாலும்... சமீபத்திலேயே கைகொடுத்தது. இருப்பினும் அரசு மீதான அதிருப்தி குறையவில்லை.

இந்த சூழலில்... ஜனவரி வரையில் பதவி காலம் இருக்கும் சூழலில்.. நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார் ரிஷி சுனக்.

பிரிட்டனில் மொத்தம் இருக்கும் 650 இடங்களில் 326 இடங்களை பிடிக்கும் கட்சி ஆட்சியமைக்கும்.

ஆனால் தேர்தலில் 412 இடங்களை வென்று ஆட்சியை பிடித்தது தொழிலாளர் கட்சி. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி கட்சி 121 இடங்களில் மட்டும் வென்று மோசமான தோல்வியை சந்தித்தது.

14 ஆண்டுகளாக பலமாக ஆட்சியிலிருந்து கன்சர்வேட்டிவ் கட்சியை அரியணையிலிருந்து அகற்றி மகத்தான வென்றதை தொழிலாளர் கட்சியினர் கொண்டாடினர்.

லண்டனில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் முன்பு உரையாற்றிய தொழிலாளர் கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர்... நான்கரை ஆண்டுகளில் கட்சியை சீரமைத்தோம், இப்போது பிரிட்டனை மீட்டெடுக்க நாம் தயாராக இருக்கிறோம் என்றார்...

இதற்கிடையே கன்சர்வேட்டிவ் கட்சி தோல்விக்கு பொறுப்பு ஏற்ற ரிஷி சுனக்... மன்னர் சார்லசை சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்கினார்...

61 வயதாகும் கெய்ர் ஸ்டார்மர்... 2019 பிரிட்டன் தேர்தலில் படுதோல்விய தழுவிய தொழிலாளர் கட்சிக்கு தலைமை பொறுப்பை ஏற்று... சீர்திருத்தங்களை செய்து வெற்றி முத்திரை பதித்திருக்கிறார். 

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்