இலங்கையில் இருந்து ஐ.எஸ். தீவிரவாத செயல்பாடுகளை முற்றிலுமாக நீக்குவதற்கு அமெரிக்காவின் உதவி நாடியுள்ளதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்புவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்க செயல்பாடுகள் வெற்றி அளித்திருப்பதாக தெரிவித்தார். குண்டுவெடிப்புகளுக்கு எதிரொலியாக இஸ்லாமிய கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.