* அவரது கட்சி அலுவலகத்தில், ஆதரவாளர்களுடன் இந்த ஆலோசனை நடைபெற்றது. இதையடுத்து பேட்டியளித்த ரனில், இலங்கைக்கு தானே பிரதமராக நீடிப்பதாகவும், அரசியலமைப்பு சட்டப்படி, அதிபர் சிறிசேனாவால் தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
* தன்னை நீக்கியதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் ரனில் விக்கிரமசிங்கே அறிவித்துள்ளார்.