உலகம்

Gaza Heavy Rain | போருக்கு நடுவில் இருக்கும் நிம்மதியையும் கெடுக்கும் மழை.. தவிக்கும் பாலஸ்தீனர்கள்

போருக்கு நடுவில் இருக்கும் நிம்மதியையும் கெடுக்கும் மழை..

thanthitv

#Gaza | #IsraelGazaWar | #HeavyRain | #WorldNews | #ThanthiTV Gaza Heavy Rain | போருக்கு நடுவில் இருக்கும் நிம்மதியையும் கெடுக்கும் மழை.. தவிக்கும் பாலஸ்தீனர்கள் காசாவின் கான் யூனிஸ் பகுதியில் தற்காலிக முகாம்களில் தங்கி வரும் பாலஸ்தீனர்கள் மழையால் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பல கூடாரங்கள் முழுவதும் நனைந்து, சில பகுதிகள் நீரில் மூழ்கின. தற்காலிகமாக அமைக்கப்பட்ட முகாம்களில் தங்கியுள்ள மக்கள், தண்ணீர் தேங்கிய பகுதிகளில் இருந்து நீரை வெளியேற்ற முயன்றனர். சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் தங்கியுள்ள 761 இடம்பெயர்வு முகாம்கள் வெள்ள அபாயத்தில் உள்ளன. கனமழையை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறைந்தது 3 லட்சம் புதிய கூடாரங்கள் அவசரமாக தேவைப்படுவதாக ஐ.நா. மற்றும் பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள பல கூடாரங்கள் மெல்லிய பிளாஸ்டிக் மற்றும் துணியால் செய்யப்பட்டவை என்பதால், அவை மழையைத் தாங்க முடியாத நிலையில் உள்ளன. இந்நிலையில், காசாவுக்கு தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் உணவு, மருந்து மற்றும் தங்கும் வசதிகளுடன் அனுப்பப்படுகின்றன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆனால், சர்வதேச உதவி அமைப்புகள் அந்த உதவிகள் போதுமானதாக இல்லை என்று கூறுகின்றன.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்