கண்கள் தெரியாத...காதுகள் கேட்காத நாய்க்குட்டியை தவறுதலாக காவலர் சுட்டுக் கொன்றதால் அமெரிக்காவின் ஸ்டர்ஜென் நகர நிர்வாகம் நாய் உரிமையாளருக்கு 44 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திறந்த வெளியில் அந்த நாய் சுற்றித் திரிந்த நிலையில், அதன் உரிமையாளர் நாயை பிடிக்க முயன்றார். அப்போது அந்த நாய் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தவறுதாக எண்ணி காவலர் நாய் teddyஐ சுட்டுக் கொன்றுள்ளார். கடந்த ஆண்டு இச்சம்பவம் நிகழ்ந்த நிலையில், தற்போது இவ்வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாய் சுடப்பட்ட காட்சிகளை இணையவாசிகள் மீண்டும் பகிர்ந்து வருகின்றனர்.