``பாகிஸ்தானிடம் இருக்கும் அணு ஆயுதங்கள்.. அமெரிக்காவுக்கு ஏற்பட்ட கட்டாயம்’’ - மார்கோ ரூபியோ
#indvspak #trump #marcorubio
பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் உறவு இந்தியாவின் பாதுகாப்பு கவலைகளை தீர்க்க உதவியாக இருக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாலும், புவியியல் ரீதியான அதன் அமைவிடத்தைக் கருத்தில் கொண்டும் அமெரிக்கா அந்த நாட்டுடன் தொடர்பில் இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் பயங்கரவாதத்தை எதிர்க்கும் அமெரிக்கா, பாகிஸ்தானுடன் உரையாடுவதன் மூலம் இந்தியா அஞ்சும் விஷயங்களைத் தடுத்து நிறுத்த முடியும் எனவும் அவர் கூறினார்... மேலும், பாகிஸ்தானுடனான இந்த உறவு இந்தியாவுடன் அமெரிக்கா கொண்டுள்ள கூட்டாண்மைக்கு எந்தவிதத்திலும் பாதகமாக இருக்காது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ உறுதியளித்துள்ளார்.