உலகம்

பாகிஸ்தானை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல அதிரடி முடிவுகள் - பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தானை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல அதிரடி முடிவுகளை எடுக்கப்போவதாக அந்நாட்டின் புதிய பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

* பாகிஸ்தானின் பிரதமராக அண்மையில் பதவியேற்ற, இம்ரான் கான், தனது முதல் உரையில், பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்றால், கோடீஸ்வரர்கள் அனைவரும் முறையாக வருமான வரி செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

* பாகிஸ்தான், பிற நாடுகள் அளிக்கும் கடன் உதவியை நம்பியே வாழ்ந்து வருவதாகவும், அந்தப் பழக்கத்தை ஒழித்து, வறுமையைப் போக்கும் வகையில், இஸ்லாமிய நலச் சட்டப் படி, பாகிஸ்தானில் ஆட்சி நடத்தப் போவதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

* 524 பணியாட்கள் கொண்ட மிகவும் ஆடம்பரமான பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் தான் வசிக்கப் போவதில்லை எனவும், அதனை அருங்காட்சியகமாக மாற்றப் போவதாகவும், அதற்கு பதிலாக ஒரு சிறிய வீட்டில் இரண்டு பணியாட்களுடன் வசிக்கப் போவதாகவும் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

* பாகிஸ்தானின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றால், மக்களும் இது போன்ற எளிமையான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றும், இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் இம்ரான் கான் வலியுறுத்தினார்.

* பாகிஸ்தான் பிரதமருக்காக பயன்படுத்தப்பட்டு வரும், விலையுயர்ந்த குண்டு துளைக்காத கார்களை விற்கப்போவதாகவும், இம்ரான் கான் அதிரடியாக அறிவித்துள்ளார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்