உலகம்

Iran Israel War Tamil News | ஈரான் போருக்குள் இறங்கி சண்டை செய்ய வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான்

பாகிஸ்தான் போருக்குள் இழுக்கப்படுமா? சவுதி ஒப்பந்தம் காரணமா?

thanthitv

#irantamilnews #trump #iranisraelwar #alikhameneideath #iranisraelwartamilnewstoday #netanyahu #iranisraelwarnewstodaytamil ஈரான் போரில் பாகிஸ்தான் யார் பக்கம் ? ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே போர் முற்றியுள்ள நிலையில், அணு ஆயுத வல்லமை கொண்ட இஸ்லாமிய நாடான பாகிஸ்தான் இந்தப் போரில் எந்தப் பக்கம் நிற்கும் என்ற கேள்வி உலக அரங்கில் எழுந்துள்ளது. குறிப்பாக, தனது நெருங்கிய நட்பு நாடான சவுதி அரேபியாவுடனான பாகிஸ்தானின் பாதுகாப்பு ஒப்பந்தம் இதற்கு விடையளிக்கும் வகையில் அமைந்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இடையே நீண்ட காலமாக ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இதன் படி, சவுதி அரேபியாவின் புனிதத் தலங்கள் அல்லது அதன் நிலப்பரப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளானால், அந்த நாட்டைப் பாதுகாக்க பாகிஸ்தான் தனது ராணுவத்தை அனுப்பக் கடமைப்பட்டுள்ளது. ஒருபுறம் சவுதி அரேபியா தனது பொருளாதார மற்றும் ராணுவ கூட்டாளி, மறுபுறம் ஈரான் தனது அண்டை நாடு என்பதால் ‌ தற்போது பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் அமைதி காத்தாலும் சவுதியின் பாதுகாப்பைக் காரணம் காட்டி போருக்குள் பாகிஸ்தான் இழுக்கப்பட வாய்ப்புள்ளதாகவே கூறப்படுகிறது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு