பாகிஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 97 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் இருந்து 99 பேருடன் கராச்சி நோக்கி சென்ற அந்த விமானம், ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த போது, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனிடையே விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.