உலகம்

பாகிஸ்தான் தேர்தலில் புதிய திருப்பமாக பிரதமர் ஆகிறார் இம்ரான்கான்...

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமராகும் வாய்ப்புள்ள இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் இம்ரான் கானின் பிடிஐ கட்சி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதனால் இம்ராம்கான் பாகிஸ்தானின் புதிய பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபின் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க விரும்புவதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார். காஷ்மீர் மக்கள் நீண்ட நாட்களாக பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவதாக குறிப்பிட்டுள்ள இம்ரான் கான் இந்தியாவுடன் நட்புறவை எப்போதும் பாகிஸ்தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் வரிசீர்திருத்தம் மற்றும் அரசு செலவீனங்களை குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் விரும்புவதாகவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்