பாகிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில், போலீஸ் அதிகாரி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். பளுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் உள்ள மசூதியில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து, ஹஜி அமனுல்லா என்ற போலீஸ் உயரதிகாரி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.