கவுதமாலாவில் உள்ள பகாயா எரிமலை வெடிப்பைக் காண அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர். கைகளில் சிலுவைகளை ஏந்தியபடி செல்லும் அவர்கள், எரிமலை வெடிப்பை நிறுத்தவும், கொரோனா தொற்றிலிருந்து விடுபடவும் பிரார்த்தனை செய்வதாகத் தெரிவிக்கின்றனர். நடு அமெரிக்காவில் இருக்கக்கூடிய எரிமலைகளுள் ஒன்றாகத் திகழும் இந்த பகாயா எரிமலை, கவுதமாலா நகருக்குத் தெற்கே 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.