சிறந்த ஆவணப் படம் :
சிறந்த ஆவணப் படத்துக்கான விருது, ப்ரீ சோலோ (FREE SOLO) படத்துக்கு வழங்கப்பட்டது. இதில் நடித்த எலிசபெத் சாய் வாசர்கெலி, ஜம்மி சின், இவான் ஹேயஸ் மற்றும் ஷாநான் டில் ஆகியோர் இந்த விருதைப் பெற்றனர்.
சிறந்த துணை நடிகை :
சிறந்த துணை நடிகைக்கான விருது, "If Beale Street Could Talk." படத்தில் நடித்த ரெஜினா கிங்-குக்கு வழங்கப்பட்டது.
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் :
சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்கார பிரிவில் "VICE" படம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக GREG CANNOM, KATE BISCOE மற்றும் PATRICIA DEHANEY ஆகியோர் பெற்றனர்.
சிறந்த ஆடை வடிமைப்பாளர் :
சிறந்த ஆடை வடிமைப்பாளருக்கான விருதை, BLACK PANTHER படத்துக்காக RUTE CARTER பெற்றார்.
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு :
சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது, BLACK PANTHER படத்துக்காக, HANNAH BEACHLER மற்றும் அரங்க வடிவமைப்புக்காக JAY HART ஆகியோர் பெற்றனர்.
சிறந்த வெளிநாட்டு படம் :
சிறந்த வெளிநாட்டு படமாக மெக்ஸிகோவின் ROMA படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது, ROMA படத்துக்காக ALFONSO CUARON- க்கு வழங்கப்பட்டது.
சிறந்த துணை நடிகர் :
சிறந்த துணை நடிகருக்கான விருதை, "Green Book" படத்தில் நடித்த Mahershala Ali பெற்றார். இவர் இரண்டாவது முறையாக இந்த விருதைப் பெறுகிறார். ஏற்கனவே "Moonlight" படத்துக்காக ஆஸ்கர் விருதை அவர் பெற்றார்.
சிறந்த படத்தொகுப்பு :
சிறந்த படத்தொகுப்புக்கான விருது, BOHEMIAN RHAPSODY படத்துக்காக, JOHN OTTMAN-க்கு வழங்கப்பட்டது.
சிறந்த அனிமேஷன் படம் :
சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருது, SPIDER MAN : INTO THE SPIDER VERSE படத்துக்காக, BOB PERSICHETTI, PETER RAMSEY, RODNEY ROTHMAN, PHIL LORD AND CHRISTOPHER MILLER- ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த அனிமேஷன் குறும்படம் :
சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருதை, BAO படத்துக்காக, DOMEE SHI மற்றும் BECKY NEIMAN -COBB ஆகியோர் பெற்றனர்.
சிறந்த ஆவண அனிமேஷன் குறும்படம் :
சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருது "PERIOD END OF SENTENCE" படத்துக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை RAYKA ZEHTABCHI மற்றும் MELLISA BERTON ஆகியோர் பெற்றனர்.
சிறந்த ஒலி தொகுப்பு :
சிறந்த ஒலி தொகுப்புக்கான விருது BOHEMIAN RHAPSODY படத்துக்கு வழங்கப்பட்டது.
சிறந்த VISUAL EFFECTS :
சிறந்த VISUAL EFFECTS-க்காக, FIRST MAN படத்துக்காக PAUL LAMBERT, IAN HUNTER, TRISTAN MYLES, J.D.SCHWALM ஆகியோருக்கு வழங்கப்பட்டது.