உலகம்

கொரோனா வைரசின் தோற்றம்... "வெளிப்படைத் தன்மை தேவை" - சீனா மீது அமெரிக்க வல்லுனர்கள் குற்றச்சாட்டு

கொரோனா வைரசின் தோற்றம் குறித்து கண்டறிய சீனா வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என அமெரிக்க வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

கொரோனா வைரசின் தோற்றம்... "வெளிப்படைத் தன்மை தேவை" - சீனா மீது அமெரிக்க வல்லுனர்கள் குற்றச்சாட்டு

கொரோனா வைரசின் தோற்றம் குறித்து கண்டறிய சீனா வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என அமெரிக்க வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அமெரிக்க அதிபரின் மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாசி இது குறித்து தெரிவிக்கையில், கொரோனா வைரசின் தோற்றம் குறித்து நூறு சதவீதம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், உலக சுகாதார அமைப்பு மேற்கொண்ட ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு நாம் கொண்டு செல்ல வேண்டும் என தெரிவித்தார். மேலும், வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் ஆன்டி ஸ்லாவிட் இது குறித்து பேசுகையில், இதில், சீனா வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் எனவும், அதற்கு உலக சுகாதார அமைப்பு தங்களுக்கு உதவ வேண்டும் என்றும் கூறினார். அத்துடன், இந்த ஆய்வில் அடி ஆழம் வரை சென்று, கொரோனா வைரசின் தோற்றம் குறித்து கண்டறிவது இன்றியமையாத ஒன்று என்றும் குறிப்பிட்டார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்